இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு மரண அச்சுறுத்தல்

இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு மரண அச்சுறுத்தல்

இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் (PHIU) உதவித் தலைவர் உட்பட அநேக பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு (PHIs) மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மரண அச்சுறுத்தல் விடுத்த போதிலும் கொவிட்-19 நிலைமையை நிர்வகிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

“இவ்வாறான மரண அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் கடமையை நிறைவேற்றுகிறோம்” என இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்க உதவித் தலைவர் ஏ.யூ.ரி.குலதிலக தெரிவித்துள்ளார்.

மரண அச்சுறுத்தல்களைப் பெற்ற பத்து சுகாதார பரிசோதகர்கள் தமது பாதுகாப்புக்காக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது