
கேகாலை வைத்தியசாலை மருத்துவர்கள் மூவருக்கு கொரோனா! மருத்துவர் குமார விக்ரமசிங்க தகவல்
கேகாலை வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் மூன்று மருத்துவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையின் வெளிநோயளர் பிரிவில் கடமையாற்றி வரும் மருத்துவர்களே இவ்வாறு நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
கேகாலை மாவட்டத்தில் மொத்தமாக 23 கொவிட்-19 நோய்த் தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நோய்த் தொற்றுக்கு இலக்கான பெண் மருத்துவர் ஒருவரின் கணவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டமை உறுதியாகியுள்ளது.
இந்த மருத்துவரின் மகள் மற்றும் வீட்டுப் பணிப்பெண் ஆகியோருக்கும் நோய்த் தொற்று பரவியுள்ளதாகவும் அனைவரும் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.