
20 ஆம் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று..!
அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.
இன்று மாலை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ளது.
20ம் திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்றும் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், 20ஆம் திருத்தச் சட்டமூலத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரிக்காது என தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பானது நாட்டை பிளவுபடுத்த சம்மதிக்காது
அதேபோன்று 20ஆம் திருத்தச் சட்டம் நாட்டின் இறைமையை மீறுகிறது
இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இலங்கை தமிழரசுக் கட்சியும் 20ம் திருத்தச் சட்ட மூலத்தை முழுமையாக நிராகரிக்கின்றன.
நாட்டின் ஜன நாயகத்தை சர்வாதிகாரம் ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது.
தமிழ் மக்கள் புதிய அரசியல் யாப்பு ஒன்றுக்கான ஆணையை வழங்கி இருக்கிறார்கள்.
கடந்த தேர்தலில் அரசாங்கம் பெற்றுக்கொண்ட வெற்றியை தங்களுக்கு மாத்திரம் சாதகமாக பயன்படுத்துவதை எற்றுக்கொள்ள முடியாது என இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.