நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று..!

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று..!

நாட்டில் நேற்றைய தினம் 167 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்

அவர்களில் 49 பேர் பேலியாகொடை மீன் சந்தையில் பணியாற்றுபவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

38 பேர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் எனவும் 79 பேர் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 464 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 44 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட் 19 தொற்றினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 501 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்காரணமாக அந்த வர்த்தக நிலையம் உள்ளிட்ட மேலும் ஒரு வர்த்தக நிலையமும் மூடப்பட்டுள்ளதாக மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமையாளர் லசந்த சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 தொற்றுறுதியான உரிமையாளருடன் தொடர்புடையவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு இன்று காலை 10 மணிக்கு மெனிங் சந்தை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அதன் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கொழும்பு மெனிங் சந்தை தீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமையே திறக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் எந்தவொரு கொடுக்கல் வாங்கலுக்காகவும் மென்ங் சந்தைக்கு பிரவேசிக்க வேண்டாம் என வர்த்தகர்களிடமும் நுகர்வோர்களிடமும் அந்த சங்கத்தின் பிரதிநிதிகள் கோரியுள்ளனர்.