
யாழ்ப்பாணம் உட்பட நாடளாவிய ரீதியில் மாற்றம் செய்யப்பட்ட புகையிரத சேவை நேர அட்டவணை வெளிவந்தது
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை அடுத்து இன்று(21) முதல் புகையிரத சேவைகளின் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான புகையிரதங்கள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணம் உட்பட சில புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இயங்கவுள்ளன.
இதன்படி,நிறுத்தப்பட்ட மற்றும் சேவை மாற்றம் செய்யப்பட்ட புகையிரத சேவைகள் தொடர்பான விபரத்தை ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை இயங்காத புகையிரத சேவைகள்
காலை 7.00 கொழும்பு கோட்டை – கண்டி (கடுகதி சேவை)
பி.ப.3.05 கண்டி – கொழும்பு கோட்டை(கடுகதி சேவை)
பி.ப.3.00 மருதானை – பெலியத்த( தெற்கு கடுகதி சேவை)
அதிகாலை 2.15 பெலியத்த – மருதானை(தெற்கு கடுகதி சேவை)
பி.ப.3.05 கொழும்பு கோட்டை – பொலன்நறுவை(புலதிஸி கடுகதி சேவை)
அதிகாலை 2.15 பெலியத்த – கொழும்பு கோட்டை(புலதிஸி கடுகதி சேவை)
வார இறுதி நாட்களில் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள்
அதிகாலை 5.10 கல்கிசை – காங்கேசன்துறை (கடுகதி சேவை)
பி.ப. 1.15 காங்கேசன்துறை – கல்கிசை (கடுகதி சேவை)
காலை 11.50 கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை ( உத்தரதேவி கடுகதி சேவை)
அதிகாலை 5.30 காங்கேசன்துறை – கொழும்பு கோட்டை (உத்தரதேவி கடுகதி சேவை)