கோழி இறைச்சிக்கான அதிக பட்ச சில்லறை விலை நிர்ணயம்

கோழி இறைச்சிக்கான அதிக பட்ச சில்லறை விலை நிர்ணயம்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி கூடிய விலைக்கு கோழி இறைச்சிகளை விற்பனை செய்யும் வியாரிகளை கண்டறியும் விசேட சோதனை நடவடிக்கையில் நுகர்வோர் விவகார அதிகார சபையினர் ஈடுபட்டுள்ளனர். வர்த்தகர்கள் அதிகளவான விலைக்கு கோழி இறைச்சியை விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் பல கிடைத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ தோல் இல்லாத கோழியின் அதிகபட்ச விலையாக 430 ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டுமென நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வர்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.