குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ளும் பொதுமக்களுக்கு விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக திகதி மற்றும் நேரம் என்பனவற்றை முன்கூட்டியே பதிவு செய்துக்கொள்ள பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சேவைக்காக பதிவு செய்துகொள்ளாத நபர்கள் மற்றும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள நபர்களுக்கும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வளாகத்திற்குள் பிரவேசிக்க அனுமதி அளிக்கப்படமாட்டாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.