காலி பிரதான நீதவான் பிறப்பித் அதிரடி உத்தரவு..!

காலி பிரதான நீதவான் பிறப்பித் அதிரடி உத்தரவு..!

பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கஞ்சிபாண இம்ரானுக்கு கையடக்க தொலைபேசி வழங்க முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகத்துக்குரியவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை விரைவாக நிறைவுறுத்துமாறு காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குனவெல இன்று உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான உத்தரவு காவற்துறைக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த வழக்கு, இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி நினைவு கூறப்பட்ட சிறைக்கைதி நலன்புரி தினத்தன்று அவரை பார்வையிடுவதற்காக சென்ற கஞ்சிபாண இம்ரானின் தந்தை உள்ளிட்ட 6 பேர் உணவு பொதியில் சூட்சுமமாக கையடக்க தொலைபேசியை மறைத்து கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.