சிறிய பொதிகளை தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

சிறிய பொதிகளை தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

உணவு மற்றும் ஒளடதங்களுக்காக 20 மில்லி லீட்டர் அல்லது 20 கிராமிற்கு குறைவான பொலித்தின் அல்லது பிளாஸ்திக்கால் உற்பத்தி செய்யப்படும் சிறிய பொதிகளை தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கு பதிலாக 100 மில்லிலீற்றர் அல்லது 100 கிராம் அல்லது அதற்கு அதிகமான பொதிகளை பயன்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பலூன், பந்து வகைகள் மற்றும் நீரில் மிதக்கும் விளையாட்டுப்பொருட்கள் தவிர்ந்த பிளாஸ்ரிக்கினால் தயாரிக்கப்பட்ட பலதரப்பட்ட காற்று அடைக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்களை தடை செய்யவும் அதற்கு பதிலாக சுற்றாடல் நேயமிகு ஆரோக்கியமான மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட உற்பத்திகளைப் பயன்படுத்தவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சுகாதாரச் சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தும் பொருட்கள் தவிர்ந்த பிளாஸ்ரிக் காதுத்துடைப்பை தடை செய்யவும் அதற்கு பதிலாக உக்கலடையக் கூடிய மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட காதுத் துடைப்புக்களை பயன்படுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.