இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......!சற்று முன்னர் வெளியான செய்தி

இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......!சற்று முன்னர் வெளியான செய்தி

பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் அறிக்கை இன்றைய தினம் கிடைக்க பெற்ற போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், பேலியாகொடை மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பேலியாகொடை நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் என்.எம்.விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை முதலீட்டு சபைக்கு சொந்தமான கட்டுநாயக்க ஏற்றுமதி வலயத்தில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 314 ஆக உயர்வடைந்துள்ளது.

கொவிட்-19 தொற்றுறுதியான தொழிற்சாலையின் சகல பணியாளர்களும் நேற்றைய தினம் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்காலிகமாக சேவை நிறுத்தப்பட்ட கோட்டை காவல்நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுறுதியான காவற்துறை பரிசோதகர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த காவல்நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

இந்தநிலையில் காவல்நிலையம் தொற்று நீக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கோட்டை காவல்நிலையத்தின் இரண்டாம் மாடியில் உள்ள மேல் மாகாண விசேட விசாரணை பிரிவின் அதிகாரி ஒருவருக்கே நேற்றைய தினம் கொவிட்19 தொற்றுறுதியானது.

இதனையடுத்து அந்த பிரிவு மற்றும் கோட்டை காவற்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, குளியாபிட்டி பகுதியில் இன்றைய தினம் 30 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக சுகாதார மருத்துவ அதிகாரி உத்பல சங்கல்ப தெரிவித்துள்ளார்.

அவர்களுடன் தொடர்புடைய 1000க்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பபட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையின் சேவையாளர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

அவருடன் தொடர்புடைய 40 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.