
சட்டவிரோத மது உற்பத்தி நிலையம் முற்றுகை...!
தெமட்டகொட மற்றும் பாலத்துறை ஆகிய பிரதேசங்களுங்கு மதுபானம் வழங்கிய வெலிசல பகுதியில் பாரிய தொழிற்சாலையாக இயங்கி வந்த சட்டவிரோத மது உற்பத்தி நிலையம் ஒன்று கொழும்பு கலால் வரி திணைக்கள உத்தியோகத்தர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது சந்கே நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
33 மற்றும் 39 வயதுகளை உடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.