கொரோனா அபாயம் – பாடசாலைகளை மூடுவதற்கு சீனா தீர்மானம்

கொரோனா அபாயம் – பாடசாலைகளை மூடுவதற்கு சீனா தீர்மானம்

கொரோனா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக பீஜிங்கிலுள்ள பாடசாலைகளை மூடுவதற்கு சீனா தீர்மானித்துள்ளது.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்தல் மற்றும் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பாக இன்று விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்தோடு பல்கலைக்கழக கற்பித்தல் செயற்பாடுகளையும் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஒன்லைன் முறையின் ஊடாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வது தொடர்பாகவும் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டதையடுது வணிக வளாகங்கள் உட்பட வர்த்தக ஸ்தாபனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.