புறக்கோட்டையில் மூவருக்கு கொரோனா! தற்காலிகமாக மூடப்பட்ட வர்த்தக நிலையம்

புறக்கோட்டையில் மூவருக்கு கொரோனா! தற்காலிகமாக மூடப்பட்ட வர்த்தக நிலையம்

கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் மூன்று பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து புறக்கோட்டையில் இன்று 100க்கும் மேற்பட்ட PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் வர்த்தக நிலையமொன்றும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குணசிங்கபுர பேருந்து தரிப்பிடம் மற்றும் 4ஆம் குறுக்குத்தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 180 பேருக்கு இவ்வாறு PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கொழும்பு – மத்துகம பேருந்து நடத்துனரின் மூலமாக இவர்களுக்கு கொரோனா பரவியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவண் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த மூவர் உள்ளடங்கலாக புறக்கோட்டை பகுதியில் இதுவரை ஐவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த ஐவருடனும் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்களுக்கே PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.