வத்திக்கானின் புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா

வத்திக்கானின் புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா

வத்திக்கானில் உள்ள புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக போப் பிரான்சிஸ் அவர்களின் உடல்நலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பொப் பிரான்சிஸின் சென்டா மார்தா வீட்டில் இருந்த அந்நபர் அவர்களது உறவினர்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போப்பின் 130 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இன்றி கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

ஆர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் சிறு வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த போது, அவரது நுரையீறலின் ஒரு பகுதி வெட்டி அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக அவர் தொடர்ந்து கொவிட் 19 வைரஸ் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.