டேட்டிங் சென்றவேளை இளம் பெண்ணுக்கு முத்தமிட்டவருக்கு வாழ்நாள் முழுவதும் ஏற்பட்ட சோகம்

டேட்டிங் சென்றவேளை இளம் பெண்ணுக்கு முத்தமிட்டவருக்கு வாழ்நாள் முழுவதும் ஏற்பட்ட சோகம்

டேட்டிங் சென்றபோது இளம்பெண்ணை முத்தமிட்ட ஒருவர் வாழ்நாள் முழுவதும் நீங்காத ஒரு நோயை பெற்றுக்கொண்டுள்ளார். Martin Ashley Conway (45) என்பவர் ஒன்லைனில் Jovanna Lovelace என்ற இளம்பெண்ணை சந்தித்துள்ளார்.

பின்னர் இருவரும் டேட்டிங் சென்றுள்ளனர். அப்போது இருவரும் நெருக்கமாக முத்தமிட்டுக் கொண்டுள்ளனர். ஆனால், Jovanna வுக்கு herpes simplex என்ற வைரஸ் தொற்று இருந்துள்ளது. அதை Martin இடம் கூறாமல் மறைத்துள்ளார்.

டேட்டிங் முடிந்து வீடு திரும்பிய Martinக்கு வாயில் திடீரென புண்கள் தோன்றியுள்ளன. இருமலும், ப்ளூ போன்ற அறிகுறிகளும் ஏற்பட்டு வாய்ப்புண் அதிகமாகி எதையும் விழுங்க முடியாமல் தவித்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு சென்றபோது, அவருக்கு herpes simplex என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் சோகம் என்னவென்றால், Martin வாழ்நாள் முழுமைக்கும் அந்த வைரஸை சுமக்கவேண்டும். கடும் கோபமும், வெறுப்பும் அடைந்த Martin, Jovanna மீது 130,000 பவுண்டுகள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.