20 ஆவது திருத்தம்: வாக்கெடுப்பிற்கு வழிவகுக்கும் திருத்தங்கள் முன்வைக்கப்பட மாட்டாது – நீதி அமைச்சு

20 ஆவது திருத்தம்: வாக்கெடுப்பிற்கு வழிவகுக்கும் திருத்தங்கள் முன்வைக்கப்பட மாட்டாது – நீதி அமைச்சு

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது வாக்கெடுப்பிற்கு வழிவகுக்கும் திருத்தங்கள் முன்வைக்கப்பட மாட்டாது என நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு 21 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட பின்னர் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், இதனுடன் தொடர்புடைய திருத்தங்களில் மாற்றம் ஏற்பட்டால், அது பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நடைபெறும் என்றும் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளுக்கேற்ப, குறித்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் நீதி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.