கம்பஹா மாவட்டத்தில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான தகவல்

கம்பஹா மாவட்டத்தில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான தகவல்

கம்பஹா மாவட்டத்தில் 19 காவல்துறை அதிகார பிரதேசங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் இன்றும் தொடர்கின்றது.

அத்துடன் குறித்த பகுதிகளில் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு புதிய சுகாதார விதிமுறைகள் நாடளாவிய ரீதியில் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள பிரதேசங்களுடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் பொது மக்களும் முககவசத்தை அணிய வேண்டும் என்பதுடன் 1 மீற்றர் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அதனை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை ஊடக பேச்சாளர் எச்சரித்துள்ளார்