
ஜனாதிபதி செயலகம் மக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்
கொவிட் 19 தொற்றை அடுத்து சுகாதாரத் துறை வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் பரிந்துரைகளின் படி, ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தருவதாலும், அலுவலகத்தில் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான அதிகாரிகளே சேவையில் ஈடுபடுவதாலும் ஏற்படும் சிரமங்களை கணக்கில் எடுத்து, அஞ்சல், தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் பொதுமக்கள் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க தயாராக உள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பு பிரிவு, ஒம்புட்ஸ்மேன் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி நிதியை பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளில் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மக்கள் தொடர்பு பிரிவு - 0114354550/0112354550 தொலைநகல் 011 2348855
publicaffairs@presidentsoffice.lk