நேற்று மட்டும் 7,675 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டன

நேற்று மட்டும் 7,675 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டன

கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களை அடையாளம் காண்பதற்காக நேற்று மட்டும் 7,675 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

தேசிய கொரோனா கட்டுப்பட்டு பணியகத்தின் அறிக்கையின் படி, பெப்ரவரி முதல் இதுவரை நாட்டில் 373,534 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,354 ஆக அதிகரித்துள்ளது.

அதில் 3,385 பேர் குணமடைந்துள்ள நிலையில் 1956 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அத்தோடு 316 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ள நிலையில் 13 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.