தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறிய 198 பேர்

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறிய 198 பேர்

முப்படையினரால் நடத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 198 பேர் இன்றைய தினம் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

கொவிட் 19 ஐ கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

 

அவர்களில் இன்றைய தினம் பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தே அதிகளவானோர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 53 ஆயிரத்து 395 பேர் இதுவரையில், தனிமைப்படுத்தலை நிறைவு செய்து விடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இந்தநிலையில், 86 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 9 ஆயிரத்து 415 பேர் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளதாக கொவிட் 19 ஐ கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.