கொழும்பின் சில பகுதியில் இன்று 12 மணிநேர நீர்விநியோகத்தடை!

கொழும்பின் சில பகுதியில் இன்று 12 மணிநேர நீர்விநியோகத்தடை!

மொரட்டுவ பகுதியில் இன்று 12 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி மொரட்டுவ மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு 8 மணிமுதல் 12 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மொரட்டுவ பகுதியில் உள்ள பிரதான நீர்க்குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாகவே நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

எனினும் மொரட்டுவ மாநகரசபைக்குட்பட்ட சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பு தொகுதியில் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படமாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே மொரட்டுவ பிரதேசத்தில் எகொட உயன மற்றும் மோதர ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்த நீர்வழங்கல் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.