முத்தையா முரளிதரன் வெளியிட்ட தன்னிலை விளக்க அறிக்கை..!

முத்தையா முரளிதரன் வெளியிட்ட தன்னிலை விளக்க அறிக்கை..!

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தன்னிலை விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முத்தைய முரளிதரனின் வாழ்க்கை வரலாறு சொல்லும் '800' என்ற திரைப்படம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இதில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவரை இந்த படத்தில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அண்மையில் இந்த திரைப்படத்தின் முன்னோட்டமும் வெளியாகி இருந்தது.

எனினும் முதளிதரன் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் தொடர்பாகவும், வடக்கு கிழக்கு மாகாண மக்களது பிரச்சினைகள் தொடர்பாகவும் முன்னதாக வெளியிட்டிருந்த கருத்துகள் காரணமாக, அவருக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

அதற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

முப்பது வருடங்களாக இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் இந்திய வம்சாவளியினர் அடங்குகின்றனர்.

எழுபது முதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், ஜே.வி.பி போராட்டத்தில் நடந்த வன்முறைகள் தொடர் குண்டு வெடிப்புகள் உள்ளிட்டவைகளில் அதிகம் பாதிப்பினை எதிர்நோக்கியிருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் கடந்த காலங்களில் தெரிவித்த கருத்துக்கள் சில திரிவு படுத்தப்பட்டதாலேயே தன்மீது இவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நீண்ட கால யுத்தம் நாட்டில் நிறைவடைந்தமையே மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தாகவும் அதனால் அப்பாவிகள் கொல்லப்பட்டமைக்கு தான் ஒருபோதும் ஆதரிக்க இல்லை.

இவையனைத்தும் விடுத்து சிலர் அறியாமையாலும், சில அரசியல் காரணத்திற்காகவும் தன்னை தவறானவன் போல் சித்தரிப்பதாகவும் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இனத்திற்கு எதிரானவன் போல் தன்னை விமர்சிப்பது தனக்கு கவலையளிக்கிறது என இலங்கையின் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவையனைத்தும் விடுத்து சிலர் அறியாமையாலும், சில அரசியல் காரணத்திற்காகவும் தன்னை தவறானவன் போல் சித்தரிப்பதாகவும் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமிழ் இனத்திற்கு எதிரானவன் போல் தன்னை விமர்சிப்பது தனக்கு கவலையளிப்பதாகவும் இலங்கையின் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.