கம்பஹாவைச் சேர்ந்த தாதியால் மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்ட மூவர்

கம்பஹாவைச் சேர்ந்த தாதியால் மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்ட மூவர்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் கம்பஹாவைச் சேர்ந்த தாதியுடன் விடுதியில் தங்கியிருந்த மூவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பிலுள்ள விடுதியில் தங்கியிருந்த மூன்று பேரே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வைத்தியர் அவரது மனைவி மற்றும் ஒரு தாதியுமாக மூன்று பேரே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த மூன்று பேருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, இம்மூவரையும் விடுவிப்பது தொடர்பில், ஆலோசித்து வருவதாக சுகாதார அதிகாரியொருவர் தெரிவித்தார்.