
ஸ்ரீலங்கா விரையும் அமெரிக்காவின் சக்தி வாய்ந்த பிரதிநிதி! எடுக்கப்பட்டுள்ள விசேட திட்டம்
அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொள்ளும்போது அவருக்கு எயர்பபிள் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்குவதற்கான விசேட திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொள்ளும் எயர்பபிள் முறையின் கீழ் கடுமையான கொவிட்19 கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும் என்று அரசாங்கத்தினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் தெரியவருவதாவது, அண்மையில், சீன உயர்மட்ட குழுவினர் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி பிரதமரை சந்தித்தவேளை இதனை பயன்படுத்தினோம், பிரதிநிதிகள் கே 95 முகக்கவசங்களை அணிந்திருந்தனர் சமூக விலக்கலை பின்பற்றினார்கள் ஹோட்டலில் தங்கியிருந்தவேளை ஏனையவர்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள்ளேயே நடமாடினார்கள் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐந்து வருடத்திற்கு பின்னர் அமெரிக்காவிலிருந்து மிக முக்கிய பிரமுகர் ஒருவர் விஜயம் மேற்கொள்வதை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கைகளை எடுப்பதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மைக்பொம்பியோ ஒக்டோபர் 28 ம் திகதி இலங்கை வருகின்றார், இதன்போது ஜனாதிபதி வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளைமேற்கொள்ளவுள்ளார்.
இதற்கிடையில், மைக்பொம்பியோவின் விஜயத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவிலிருந்து குழுவொன்று இலங்கை வரவுள்ளதாகவும் அவர்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.