அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பிரதமர் தெரிவித்த விடயம்..!

அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பிரதமர் தெரிவித்த விடயம்..!

கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட புதிய ஊழல் ஒழிப்பு குழுவின் செயலாளர் அலுவலகத்தின் செலவுகளுக்காக பிரதமர் அலுவலகத்தில் இருந்து 33 தசம் 7 மில்லியனுக்கும் அதிக தொகை செலவிடப்பட்டதை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளார்.

அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் பியதாஸ குடாபாலகே முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் நேற்றைய தினம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பிரதமர் சாட்சியம் வழங்கியிருந்தார்.

இதன்போது அந்த அலுவலகத்தின் 44 சேவையாளர்களுக்கான வேதனம் மற்றும் கொடுப்பனவு வழங்களுக்காக குறித்த தொகை செலவிடப்பட்டமைக்கான சாட்சி முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு இதன்போது தெரிவித்தது

இதற்கு பதிலளித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அது அவ்வாறே இடம்பெற்றிருக்கக்கூடுமென தெரிவித்துள்ளார்.

ஊழல் ஒழிப்பு குழுவின் செயலாளர் அலுவலகத்திற்கு சட்ட ஆலோசகராக செயற்பட்ட மேலதிக மன்றாடியர் நாயகம் துசித் முதலிகேவுக்கு, குறித்த காலப்பகுதியில் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு இதன்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்தது.

அதனையும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் ஒழிப்பு பிரிவின் செயலாளர் அலுவலகத்தின் சட்டதன்மை தொடர்பில் இதன்போது முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், குறித்த குழு சட்டபூர்வமாக நியமிக்கப்பட்டதுடன், அதன் செயற்பாடுகள் சட்டரீதியாக இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஊழல் ஒழப்பு குழுவின் சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கான உறுப்பினர்களை தாம் தெரிவு செய்யவில்லை எனவும், அந்த செயற்பாடுகள் சட்டமா அதிபர் அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.