யாழில் திடீரென பாரியளவு அதிகரித்த தங்கத்தின் விலை
யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய ஒரு பவுன் தங்கத்தின் விலை 96500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
பவுன் ஒன்றின் விலை பாரியளவு அதிகரித்த முதல் சந்தர்ப்பம் இதுவென யாழ்ப்பாண தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக யாழ்ப்பாண சந்தையில் தங்கத்தின் விலை மே மற்றும் ஜுன் மாதம் வரை ஒரளவு அதிகரிக்கும்.
திருமண நிகழ்வுகள் மற்றும் ஆலயங்களின் வருடாந்த திருவிழாக்கள் என்பனவற்றுக்கான இவ்வாறு தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்படும்.
எனினும் இந்தளவிற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்கத்தின் விலை அதிகரித்ததில்லை என யாழ்ப்பாண மக்கள் தெரிவித்துள்ளனர்.