தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்..!

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்..!

கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான புதிய தனிமைப்படுத்தல் சட்ட ஒழுங்குகள் அடங்கிய அதிவிஷேட வர்த்தமானி நேற்று வெளியானது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி வெளியானது.

புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுகின்றவர்களுக்கு எதிராக 10 ஆயிரம் ரூபாவிற்கு குறையாத அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை என்ற இரண்டு தண்டனைகள் அல்லது அவற்றுள் ஒரு தண்டனை நீதிமன்றத்தால் வழங்க முடியும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையங்கள் மற்றும் பணியிடங்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகளும் அந்த வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இதன்படி பணியிடங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு பிரவேசிக்கும் அனைவரும் சகல சந்தர்ப்பங்களிலும் பாதுகாப்பான முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இரண்டு பேருக்கு இடையே ஒரு மீற்றர் சமூக இடைவெளி பேணப்பட வேண்டும்.

கிருமி தொற்று நீக்கும் திரவங்களுடன் கைகளை கழுவதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட வேண்டும்.

தொழில் இடங்களுக்குள் செல்வதற்கு முன்னர் அனைத்து நபர்களின் உடல் நிலை வெப்பம் அளவிடப்பட வேண்டும் எனவும் அந்த வர்த்தமான அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.