தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியின் நிர்மாணப் பகுதிகளுக்கு பிரதமர் திடீர் விஜயம்!

தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியின் நிர்மாணப் பகுதிகளுக்கு பிரதமர் திடீர் விஜயம்!

கொழும்பு -12 இல் அமைக்கப்பட்டுவரும் தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியில்  இடம்பெற்ற பிரித் பாராயண நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்றார்.

ஜோன் கீல்ஸ் வர்த்தக குழுமத்தினால் கொழும்பு -12, ஜஸ்டிஸ் அக்பார் வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள Waterfront Integrated Resort தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியில் நேற்று இடம்பெற்ற பிரித் பாராயண நிகழ்விலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்றிருந்தார்.

குறித்த தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியின் முதலாவது கட்டடிடத்தின் அடிப்படை பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மஹாசங்கத்தினரின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளும் பொருட்டு பிரித் பாராயண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆறு கட்டிடங்களை கொண்ட குடியிருப்பு தொகுதியில், தற்போது அடிப்படை பணிகள் பூர்த்திசெய்யப்பட்ட கட்டிடமானது 33 மாடிகளை கொண்டதாகும்.

47 மாடிகளுடனான இரண்டு குடியிருப்பு தொகுதிகள், திரையரங்கு, கடைத்தொகுதி மற்றும் உணவகம் ஆகியவற்றை கொண்ட இந்த தொடர்மாடிக் குடியிருப்பானது, ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக விளங்குகிறது.

குறித்த சந்தர்ப்பத்தில் ஜோன் கீல்ஸ் வர்த்தக குழுமத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான கிறிஷான் பாலேந்திர, Waterfront Integrated Resort தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியின் வாஸ்த்து நிபுணர் உள்ளிட்ட ஜோன் கீல்ஸ் வர்த்தக குழுமத்தின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியின் நிர்மாணப் பகுதிகளுக்கு பிரதமர் திடீர் விஜயம்! 1தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியின் நிர்மாணப் பகுதிகளுக்கு பிரதமர் திடீர் விஜயம்! 2தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியின் நிர்மாணப் பகுதிகளுக்கு பிரதமர் திடீர் விஜயம்! 3