பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு - இராணுவத் தளபதி

பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு - இராணுவத் தளபதி

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருள் விற்பனை நிலையங்கள் தற்காலிகமாக திறக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த பகுதிகளில் நாளை(16) காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெற உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொருட் கொள்வனவில் ஈடுபடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.