
நாட்டில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நெருக்கடி!
நாட்டில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் தற்போது 168 படுக்கை வசதிகள் மாத்திரமே எஞ்சியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் ஆயிரத்து 712 படுக்கை வசதிகள் மொத்தமாகக் காணப்படுகின்றன.
இதன் அடிப்படையில், குறித்த வைத்தியசாலைகளில் தற்போது ஆயிரத்து 544 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிக்கந்த மற்றும் கம்புறுகமுவ ஆகிய வைத்தியசாலைகள் தமது நோயாளர் கொள்ளளவை ஏற்கனவே கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.