சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது

சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது

பலாங்கொடை கல்தோட்டை காவல்துறை பிரிவில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 சந்தேக நபர்களை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

வளவை கங்கையின் துணை ஆறுகளில் ஒன்றான கொங்கங்க ஓயாவில், சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிக்கொண்டிருந்த போதே அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, சந்தேக நபர்கள் இரத்தினக்கல் அகழ்வுக்கு பயன்படுத்திய உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக கல்தோட்டை காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.