தனிமைப்படுத்தல் பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்க திட்டம்

தனிமைப்படுத்தல் பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்க திட்டம்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அவர்களின் வீடுகளுக்கு விநியோகிப்பதற்கு திட்டமிப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், அப்பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களை சுகாதார வழிகாட்டல்களின் கீழ் மீள திறப்பதற்கு நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளாதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், நடமாடும் சேவைகள் மூலம் பொருட்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சதொச உள்ளிட்ட நிலையங்கள் திறக்கப்படாதமையால், அப்பகுதியிலுள்ள மக்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றமை குறித்து பதிவாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இதனால் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய வர்த்தக நிலையங்களை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், சில பகுதிகளில் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களை திறக்க முடியாது என இராஜாங்க லசந்த அழகியவன்ன குறிப்பிட்டள்ளார்.