கடற்படை மற்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்வது ஆபத்தானது

கடற்படை மற்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்வது ஆபத்தானது

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடல் பிரதேசங்களுக்குள் இன்று (15) கடற்படை மற்றும் மீனவர்கள் செல்வது ஆபத்தானது என்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசங்களில் 35 முதல் 45 கி.மீ.வரையான காற்று வீசும். எவ்வாறாயினும் இது 60 முதல் 70 கி.மீ. வரை அதிகரிக்கக் கூடும்.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியான பொத்துவில் வரையான கடல் பிரதேசங்களில் 55 முதல் 60 கி.மீ. வரை வீசும் காற்று, நீர்கொழும்பு முதல் முல்லைத்தீவு வரை புத்தளம் வழியாக மன்னார் மற்றும் காங்கேசன் துறையிலும் வீசுமென வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.