வவுனியாவில் இடம்பெற்ற பேரிடர் - 36 பேர் பாதிப்பு

வவுனியாவில் இடம்பெற்ற பேரிடர் - 36 பேர் பாதிப்பு

வவுனியாவில் வீசிய பலத்த காற்றுக் காரணமாக 14 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது .

இதனால் குறித்த வீடுகளில் வசித்த 36 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு அப்பகுதி கிராம அலுவலகர்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நெடுங்கேணியில் நேற்று ஒரு வீடு சேதமடைந்த நிலையில், இன்று வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, வவுனியா, செட்டிகுளம் போன்ற பகுதிகளில் 13 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.