கொழும்பில் கொரோனாவைத் தடுக்க 6 குழுக்கள் நியமனம்!

கொழும்பில் கொரோனாவைத் தடுக்க 6 குழுக்கள் நியமனம்!

கொழும்பில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 6 குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜேயமுனி தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் 6 சுகாதார அதிகாரிகளின் கீழ் 49 பொது சுகாதார சேவை பணியாளர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளைக் கண்டறிந்து தொற்று மேலும் பரவாமல் தடுப்பது, கொழும்பு மற்றும் கொழும்பு நகருக்கு வெளியே தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்படுவதை தடுப்பது போன்ற முக்கிய விடயங்கள் குறித்து இந்த குழுக்கள் கவனம் செலுத்தவுள்ளனர்.

அதிக ஆபத்து மிக்கவர்களை தெரிவு செய்து அவர்கள் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனைகள் முதலில் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய கடந்த மார்ச் மாதம் முதல் கொழும்பில் மட்டும் 8833 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.