ஹற்றனில் மண் சரிவு: இருவர் காயம்!

ஹற்றனில் மண் சரிவு: இருவர் காயம்!

ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹற்றன் நகரில் எம்.ஆர்.டவுன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எதிர்ப்பக்கத்தில் ஏற்பட்ட மண்சரிவில் இரண்டு கடைகள் சேதமடைந்துள்ளன.

குறித்த சம்பவம் இன்று (புதன்கிழமை) அதிகாலை நான்கு மணியளவில் ஏற்பட்டுள்ளதுடன் அங்கிருந்த இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கடைகளுக்குப் பின்புறமாக இருந்த பாரிய மண்திட்டே இவ்வாறு சரிந்துள்ளது.

மேலும், குறித்த மண்திட்டு தொடர்ந்து சரியக்கூடிய அபாயம் காணப்படுவதனால் அப்பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தினர் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை கரோலினா பகுதியில் கித்துல் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்து இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை நான்கு மணியளிவில் இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் ஒரு வீடு முற்றாகவும், மற்றைய வீடு பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இச்சம்பவம் இடம்பெறும் போது ஒரு வீட்டில் உள்ளவர்கள் உறங்கிக்கொண்டிருந்தாகவும் எனினும் தெய்வதீனமாக எவருக்கும் காயமேற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவுவதால் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.