டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் இராணுவ சிப்பாய்கள் மூவருக்கு காயம்

டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் இராணுவ சிப்பாய்கள் மூவருக்கு காயம்

தம்புள்ளை-மாத்தளை பிரதான வீதியின் நாவுல-போபெல்ல பிரதேசத்தில் இன்று காலை இராணுவத்தின் டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 3 சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர்.

குறித்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணமென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மூன்று சிப்பாய்களும் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.