தேசிய இரத்த மத்தியஸ்தானம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

தேசிய இரத்த மத்தியஸ்தானம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடமாடும் சேவையின் ஊடாக இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்வது கடினமான செயல் என்றாலும், இரத்த தானம் வழங்குவதற்கு முன்வருவோருக்கு சேவைகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தேசிய இரத்த மத்தியஸ்தானம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தேசிய இரத்த மத்தியஸ்தானத்திற்கோ அல்லது நாடும் முழுவதும் உள்ள அரச மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள இரத்த வங்கிக்கு சென்று இரத்த தானம் வழங்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், www.ndts.life என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக உங்களுக்கான நேரம் மற்றும் காலத்தை ஒதுக்கிக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.