முச்சக்கரவண்டிகளில் பயணிப்போருக்காக வெளியாகியுள்ள முக்கிய தகவல் -
இலங்கையில் முச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்கள் தொடர்பில் பதிவு ஒன்று மேற்கொள்ளுமாறு, முச்சக்கரவண்டி சாரதிகளிடம் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
வாகனத்தில் பயணிக்கும் நபர்கள் தொடர்பில் பதிவொன்றை பெற்றுக் கொள்ளுமாறு பொலிஸார், முச்சக்கர வண்டி மற்றும் போக்குவரத்து சேவை வழங்கும் வாடகை முச்சக்கர வண்டி சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிலர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முறையை இதுவரையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிக்கும் ஒவ்வொரு பயணிகள் தொடர்பிலும் பதிவொன்றை பதிவு செய்துக் கொள்ளுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தங்கள் வாகனத்தில் பயணித்தவர் யார் என்பதனை அறிந்து கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் எந்த இடத்தில் ஏறினார்கள், எந்த இடத்தில் இறங்கினார்கள் என்பதனை கையடக்க தொலைபேசியில் அல்லது புத்தகம் ஒன்றில் குறித்து வைத்துக்கொள்ளுமாறு பொலிஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.