செல்வம் அடைக்கலநாதன் - டக்ளஸ் தேவானந்தா திடீர் சந்திப்பு

செல்வம் அடைக்கலநாதன் - டக்ளஸ் தேவானந்தா திடீர் சந்திப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

டக்ளஸ் தேவானந்தாவின் மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நேற்று (12) காலை குறித்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த திடீர் சந்திப்புக்கான காரணங்கள் வெளிவராத நிலையில், பல்வேறு விடயங்கள் தொடர்பாக இவர்கள் ஆராய்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.