கொரோனா தரவரிசையில் 100 ஆவது இடத்தில் இலங்கை...!
கொரோனா வைரஸ் பரவிய நாடுகளின் தரவரிசையில் இலங்கை 100 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1905 ஆக காணப்படுகின்றது. அத்துடன் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை 552 ஆக காணப்படுகின்றது. மேலும் 1371 இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
என்பதோடு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை கொரோனா வைரஸ் பரவிய நாடுகளின் தரவரிசையில் அமெரிக்கா முதலாவது இடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும், ரஷ்யா மூன்றாவது இடத்திலும் இந்தியா நான்காவது இடத்திலும் பிரித்தானியா ஐந்தாவது இடத்திலும் காண்பபடுகின்றது. Saint Pierre Miquelon என்ற பெயருடைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு மாத்திரமே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் வைத்திய சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வெளியேறியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.