பரீட்சைக்கு மாணவர்களின் வருகை எவ்வாறு அமைந்திருந்தது தெரியுமா..?

பரீட்சைக்கு மாணவர்களின் வருகை எவ்வாறு அமைந்திருந்தது தெரியுமா..?

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் கடும் சுகாதார முறைமைகளுக்கு அமைய இன்று ஆரம்பமான கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கு மாணவர்களின் வருகை உயர்ந்த மட்டத்தில் நிலவியதாக மாகாண கல்வி பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் மாணவர்களின் வருகையும் உயர்ந்த மட்டத்தில் நிலவியதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கந்தகாடு மற்றும் புணானை தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ள 3 மாணவ மாணவிகள் இன்று செவனபிட்டி ஆரம்ப வித்தியாலயத்தில் உயர் தரப் பரீட்சைக்காக தோற்றியுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

எனினும் இன்றைய பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் சில பாடசலைகளுக்கு முன்னாள் மாணவர்களும் பெற்றோர்களும் சுகாதார முறைமைகளை பின்பற்றாது செற்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர்கள் குறிப்பிட்டனர்;.

இன்று ஆரம்பமாகியுள்ள கல்வி பொதுத்தரா தர உயர் தரப்பரீட்சை அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது

உயர் தரப்பரீட்சைக்காக 3 லட்சத்து 62 ஆயிரத்து 824 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றதுடன் அதற்காக 2 ஆயிரத்து 648 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.