கடத்தப்படவிருந்த 600 கிலோ மஞ்சள்...!

கடத்தப்படவிருந்த 600 கிலோ மஞ்சள்...!

தமிழகம் - இராமேஸ்வரத்தில் பாம்பன் அருகில் உள்ள முயல் தீவுப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 600 கிலோ மஞ்சள் இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினர் நேற்று முன்னெடுத்திருந்த கண்காணிப்பு நடவடிக்கையின் போதே இந்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது 12 மூட்டைகளில் இருந்த சுமார் 600 கிலோ கிராம் மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.