நோயாளர்களின் மருந்துகளை வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை

நோயாளர்களின் மருந்துகளை வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை

அரச வைத்தியசாலைகளில் மாதாந்த சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான மருந்துகளை அவர்களது வீடுகளுக்கே அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மாதாந்த சிகிச்சைகளின் போது காணப்படும் சன நெரிசலினால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயமுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், மாதாந்த சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களுக்கான மருந்துகள் நாளை (13) முதல் அவர்களது வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

லைப்ஸ்டைல் செய்திகள்