ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழியருக்கு கொரோனா தொற்று!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழியருக்கு கொரோனா தொற்று!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பொருட்களை கையாளும் பிரிவில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இன்று முற்பகல் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் ஊழியருக்கு கொரோனா தொற்றி இருப்பது உறுதியாகியதாக நிறுவனம் கூறியுள்ளது.

கொரோனா தொற்றாளரான இந்த நபர், கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளரான இந்த ஊழியருடன் பணியாற்றிய மேலும் 50 ஊழியர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.