மறு அறிவித்தல் வரை கம்பஹாவில் ஊரடங்கு தொடரும்! இராணுவத் தளபதி தகவல்

மறு அறிவித்தல் வரை கம்பஹாவில் ஊரடங்கு தொடரும்! இராணுவத் தளபதி தகவல்

கம்பஹாவில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் மேலும் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதன் காரணமாக இந்த ஊரடங்கு உத்தரவு தொடரும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அப்பகுதியில் நிலைமையை ஆராய்ந்த பின்னரே அரசாங்கம் ஊரடங்கு தொடர்பான முடிவை எடுக்கவேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இதுவரையில் 10,250 பேர் தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், படையினரால் நிர்வகிக்கப்படும் 96 தனிமைப்படுத்தல் நிலையங்களில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் மேலதிகமாக நோயாளிகள் இனம் காணப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்துவதற்கான வளங்கள் எங்களிடம் உள்ளனவா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், தேவையேற்பட்டால் மேலும் பலரை தனிமைப்படுத்துவதற்கான இடங்கள் தொடர்பில் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இடங்களை பெறுவதில் சிக்கல் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.