மற்றுமொரு பல்கலைக்கழக மாணவிக்கும் கொரோனா தொற்று

மற்றுமொரு பல்கலைக்கழக மாணவிக்கும் கொரோனா தொற்று

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மாணவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை குறித்த பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் பானதுறை மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள மாணவியும் இவரும் பல்கலைக்கழக விடுதியில் ஒரே அறையில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த மாணவி தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருக்கும் அவரது மனைவிக்கும் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லையென உறுதியாகியுள்ளது.

எவ்வாறாயினும் அவர்கள் இருவரும் தொடர்ந்து 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாத்தறை-வெல்லமடம பிரதேசத்தில் அமைந்துள்ள ருஹூணு பல்கலைக்கழகத்தின் மாணவரின் தந்தையொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த மாணவர் மற்றும் அவருடன் தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்த இன்னொரு மாணவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுக்கான PCR பரிசோதனைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.