இன்று ஆரம்பமாகும் க.பொ.தர உயர்தரப் பரீட்சை

இன்று ஆரம்பமாகும் க.பொ.தர உயர்தரப் பரீட்சை

இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை நாடளாவிய ரீதியில் 2,648 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் 12 விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் உயர் தர பரீட்சாத்திகளுக்காக அமைக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள மாணவர்களுக்காக அந்த நிலையங்களுக்கு அருகில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இன்று இடம்பெறவுள்ள கல்வி பொதுத்தரா தர உயர் தரப்பரீட்சை அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.