கூட்டம் கூட்டமா ஓட்டு போட போறாங்கன்னு கிளப்பி விட்டார்களே! ஜஸ்ட் 11 லட்சம் ஓட்டுதான் அதிகம்

கூட்டம் கூட்டமா ஓட்டு போட போறாங்கன்னு கிளப்பி விட்டார்களே! ஜஸ்ட் 11 லட்சம் ஓட்டுதான் அதிகம்

சென்னை: தேர்தலில் வாக்களிக்க, கூட்டம் கூட்டமாக போகிறார்கள்.. அப்படின்னா இந்த முறை மாற்றம்தான்! என சோஷயில் மீடியாக்களில் பேச்சுகள் அடிபட்டது. ஆனால், கடந்த முறையை விட இந்த முறை வெறும் 11 லட்சம் வாக்குகள்தான் கூடுதலாக பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. மாநிலம் முழுவதும் மாலை 6 மணி நிலவரப்படி 84.73% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது 2021-ஆம் ஆண்டு பதிவான 73.63 சதவீதத்தை விட 11% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் பெருமளவு உயர்ந்திருப்பதற்குக் காரணம் வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட மாற்றம்தான்.

2021-இல் 6.37 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, இந்த முறை (2026) 5.67 கோடியாகக் குறைந்துள்ளது. சுமார் 70 லட்சம் (11%) போலி மற்றும் முகவரி மாறிய வாக்காளர்கள் நீக்கப்பட்டதே இந்தச் சரிவுக்குக் காரணம். இப்படி வாக்காளர்கள் குறைந்திருப்பதால்தான் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தெரிகிறது.

உதாரணமாக, 100 பேர் கொண்ட பட்டியலில் 60 பேர் ஓட்டுப் போட்டால் பதிவான வாக்கு சதவிகிதம் 60%. அதே பட்டியலில் 10 பெயர்கள் நீக்கப்பட்டு 90 பேர் இருக்கும்போது, அதே 60 பேர் ஓட்டுப் போட்டால் சதவீதம் 66.6% ஆக உயரும். இப்படித்தான் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

கடந்த 2021-இல் பதிவான அதே அளவு வாக்குகள் (4.69 கோடி) இப்போதும் பதிவாகியிருந்தாலே, சதவீதம் தானாகவே 82.7% ஆக உயர்ந்திருக்கும். 2021-இல் மொத்தம் 4.69 கோடி வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி சுமார் 4.80 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது, கடந்த முறையை விடச் சுமார் 11 லட்சம் வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பதிவாகியுள்ளன.

சதவீத அடிப்படையில் இது 11% உயர்வு போலத் தெரிந்தாலும், உண்மையான மக்கள் பங்களிப்பு கடந்த முறையை விடச் சுமார் 2% முதல் 3% மட்டுமே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.