கொழும்பில் மறு அறிவித்தல் வரை மூடப்படும் முக்கிய அலுவலகம்

கொழும்பில் மறு அறிவித்தல் வரை மூடப்படும் முக்கிய அலுவலகம்

பொதுமக்கள் ஒன்றுக் கூடுவதை குறைக்கும் நோக்கிலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும் நாளை முதல் மறு அறிவித்தல் வரை வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் நிறுத்த அமைச்சு தீர்மானித்துள்ளது.

கடந்த 8 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகள் மாத்திரம் மூடப்பட்ட இந்த பிரிவை தொடர்ந்தும் மூட அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனடிப்படையில் கொழும்பு கோட்டையில் உள்ள செலிங்கோ கட்டடத்தில் இயங்கும் கொன்சியூலர் பிரிவு மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் எனவும், ஏற்றுமதி ஆவணங்களை உறுதிப்படுத்துவதற்காக மாத்திரம் முன்பதிவு செய்த நேர அடிப்படையில், ஆவணங்கள் பெற்றுக்கொள்ளப்படும்.

ஏற்றுமதி ஆவணங்களை உறுதிப்படுத்துவதற்காக 011-2338812 என்ற தொலைபேசி இலக்கத்துடனும், வெளிநாடுகளில் நிகழும் இறப்பு மற்றும் இறப்பு சம்பந்தமான ஆவண உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக 011-2323015 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்புக்கொண்ட நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுமாறு வெளியவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இதனை தவிர cypher@mfa.qov.lk என்ற மின்னஞ்சல் மற்றும் 011-2446091 மற்றும் 011-2333450 என்ற தொலைநகல் இலக்கத்துடனும் தொடர்புக்கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது